சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 100க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நீண்ட கால கோரிக்கைகளான மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், பல ஆண்டுகளாக பிடித்தம் செய்த வைப்புநிதி பணத்தை வங்கிக்கு செலுத்த மாநகராட்சி முன்வரவேண்டும், வைப்புநிதி பணத்தை கையாடல் செய்த மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: துப்புரவு பணியாளரை தகாத வார்த்தையால் திட்டிய நகராட்சி ஆய்வாளரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்