ETV Bharat / state

சேலத்தில் ரூ.4.77 கோடி ஆவணமில்லா பணம் பறிமுதல் - சேலத்தில் ரூ.4.77 கோடி ஆவணமில்லா பணம் பறிமுதல்

சேலம்: இந்நாள் வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 4 கோடியே 77 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஆவணமில்லா பணம் பறிமுதல்
ஆவணமில்லா பணம் பறிமுதல்
author img

By

Published : Apr 2, 2021, 4:05 PM IST

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் பறக்கும் படைகள் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இன்று வரை (ஏப்.2 காலை 8 மணி வரை) உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 4 கோடியே 77 லட்சம் ரூபாய் பணம், ரூபாய் 1.43 கோடி மதிப்பிலான வெள்ளி பொருள்கள் (405.73 கிலோ), ரூபாய் 36.68 மதிப்பிலான தங்கம், ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான தாமிர பொருட்கள் மற்றும் ரூபாய் 23.60 லட்சம் மதிப்பிலான சேலைகள் உள்ளிட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.அ. ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 99 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி ஆகிய 2 தொகுதிகளுக்கும் கூடுதலாக 2 வீடியோ கண்காணிப்புக் குழுக்களும் என மொத்தம் 13 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து (பிப்.26 முதல் ஏப்.02 காலை 8.00 மணி வரை) இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட 4 கோடியே 77 லட்சம் ரூபாய் பணம், ரூபாய் 1.43 கோடி மதிப்பிலான வெள்ளி பொருள்கள் (405.73 கிலோ), ரூபாய் 36.68 மதிப்பிலான தங்கம், ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான தாமிர பொருட்கள் மற்றும் ரூபாய் 23.60 லட்சம் மதிப்பிலான சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூபாய் 2 லட்சத்து 26 ஆயிரத்து 320 மதிப்பிலான ஆயிரத்து 805 மதுபாட்டில்களும், ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 400 தாமிர தட்டுகள், 400 தாமிர ஸ்பூன்கள், ஆயிரம் தாமிர கப்புகள் என மொத்தம் ரூபாய் 38 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 266 மதிப்பிலான பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதில் உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கத்தில் ரூபாய் 21 லட்சத்து 84 ஆயிரத்து 290 ரொக்கம், ரூபாய் 3 லட்சத்து 24 ஆயிரத்து 950 மதிப்பிலான 4.850 கிலோ கிராம் மதிப்பிலான வெள்ளி பொருள்களும், ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 22 தங்க மோதிரங்களும், ரூபாய் 18 ஆயிரம் மதிப்பிலான 90 சேலைகளும் என மொத்தம் ரூபாய் 2 கோடியே 7 லட்சத்து 27 ஆயிரத்து 240 லட்சம் மதிப்பிலான பொருள்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ஆய்வு குழுவின் மூலம் சரிபார்க்கப்பட்டு உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் வீடு உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.