ETV Bharat / state

'மரவள்ளிக் கிழங்கு வணிகத்தில் ரூ.504 கோடி வர்த்தகம்' - சேகோசர்வ் கூட்டமைப்பு தகவல்!

சேலம்: மரவள்ளிக் கிழங்கு மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் சபை (சேகோசர்வ்) மூலம் ரூ.504 கோடி மதிப்புள்ள வணிகம் நடைபெற்றுள்ளதாக, அந்த சபையின் தலைவர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

மரவள்ளி கிழங்கு மற்றும் ஜவ்வரி ஆலை உரிமையாளர்கள் சபை கூட்டம்
author img

By

Published : Nov 12, 2019, 10:11 PM IST

சேலத்தில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகள் மூலம் 100 கிராம், ஜவ்வரிசி வழங்கிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் பேசிய சபையின் தலைவர் தமிழ்மணி பேசுகையில்,"சங்க உறுப்பினர்களின் பங்குத் தொகைக்கு 14 விழுக்காடு பங்கு ஈவுத்தொகை வழங்குவதற்காக, மின்னணு ஏல மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்ததால் அனைத்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு உற்பத்தியாளர்களுக்கும், லட்சக்கணக்கான மரவள்ளி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் புத்துயிர் கிடைத்துள்ளது.

மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் சபைக் கூட்டம்

சேகோசர்வ் உறுப்பினர்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையான நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விநியோகத்தை, முதல் கட்டமாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் 100 கிராம் ஜவ்வரிசியை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து இந்தாண்டு தான் சுமார் 504 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிக பட்ச விலையும் சங்க உறுப்பினர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் கிடைத்துள்ளது'' என்றார்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு - திருமா கோரிக்கை​​​​​​​

Intro:சேகோசர்வ்-ன் மகாசபை கூட்டம் இன்று நடைபெற்றது. முதன்முறையாக சேகோசர்வ் மூலம் 504 கோடி ரூபாய் வணிகம் நடைபெற்றுள்ளதாக அதன் பெருந்தலைவர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

Body:சேலத்தில் சேலத்தில் இன்று நடைபெற்ற சேகோ சர்வ் மகா சபை கூட்டத்தில், கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைகள் மூலம் 100 கிராம் ஜவ்வரிசி வழங்கிட உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து கூட்டத்தில் பேசிய சேகோசர்வ் பெருந்தலைவர் தமிழ்மணி பேசுகையில்," சங்க உறுப்பினர்களின் பங்கு தொகைக்கு 14 சதவிகிதம் பங்கு ஈவுத்தொகை வழங்குவதற்காக மின்னணு ஏல மையத்தை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்ததால் அனைத்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு உற்பத்தியாளர்களுக்கும் லட்சக்கணக்கான மரவள்ளி விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது.

சேகோசர்வ் உறுப்பினர்களின் 30 ஆண்டுகள் கோரிக்கையாக உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் ஜவ்வரிசி வினியோகம் என்பதை முதல் கட்டமாக, கூட்டுறவு சங்கங்கள் மூலம் 100 கிராம் ஜவ்வரிசியை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் .

சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து இந்த ஆண்டுதான் சுமார் 504 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும் அதிக பட்ச விலையும் சங்க உறுப்பினர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

Conclusion:இந்த கூட்டத்தில் சேகோ சர்வ் சங்க மேலாண்மை இயக்குனர் நிர்வாகக்குழு உறுப்பினர் சதீஷ் ஐஎஃப்எஸ், மேலாளர் பவித்ரா மற்றும் மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியாளர்கள் ஜவ்வரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அதிக அளவு தரமான ஜவ்வரிசியை உற்பத்தி செய்த ஆலை உரிமையாளர்களுக்கும் சிறப்பாக ஏற்றுமதி வணிகம் செய்த வணிகர்கள் ஜவ்வரிசி வணிகர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.