ETV Bharat / state

'ஹெல்மெட் அணிவதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை..!' - கமிஷனர் சங்கர் - காவல்துறை ஆணையர்

சேலம்: 'சேலம் மாநகரில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதற்கு முக்கியத்துவம் அளிக்காதது வருத்தமளிக்கிறது' என்று சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் தெரிவித்தார்.

வாகன ஓட்டிகளால் காவல்துறை ஆணையர் மனவேதனை
author img

By

Published : May 25, 2019, 10:49 PM IST

சேலத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆரோக்கிய விழிப்புணர்வு ஆய்வுக் கருத்தரங்கம் நடந்தது. இதில் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் பங்கேற்று, சாலை விதிகள் விழிப்புணர்வு குறுந்தட்டு மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "சேலம் மாநகரில் சாலைப் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் சேலம் மாநகர மக்கள் ஹெல்மட் அணிய முன் வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. 2018ஆம் ஆண்டு சாலை விபத்தில் 215 பேரும், குற்றங்கள் மற்றும் கொலை சம்பவங்களில் 75 பேரும் உயிரிழந்தனர். ஆனால் இந்த வருடம் 45 பேர் மட்டுமே சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர்பலியைக் குறைப்பதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

ஆய்வுக்கருத்தரங்கம்

சேலம் 25.5.2019
M.kingmarshal stringer 

 சேலத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆரோக்கியம் விழிப்புணர்வு கருத்தரங்கம்....... சேலம் மாநகர காவல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளின் காரணமாக கடந்த  2017 ஆம் ஆண்டை காட்டிலும் கடந்த 2011ஆம் ஆண்டு சாலை விபத்தில் ஏற்படும் உயிர் பலிகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் தகவல்......... சேலம் மாநகரை பொறுத்தவரை இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதற்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்றும் இது மன வேதனையாக உள்ளது என்றும் ஆணையர் வருத்தம் தெரிவித்தார்...

 சேலத்தில் பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்பினர் இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆரோக்கிய விழிப்புணர்வு ஆய்வுக் கருத்தரங்கம் சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு குறுந்தட்டு மற்றும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். 

 தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், சேலம் மாநகரை பொறுத்தவரை சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழுப்புணர்வு நிகழ்ச்சிகள்  ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும்,  குறிப்பாக சேலம் மாநகரில் உள்ள ஒவ்வொரு சிக்னல்களிலும் விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய  விழிப்புணர்வுகள் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆனால் எவ்வளவு கெடுபிடிகள் காவல்துறையினர் கொடுத்தாலும் சேலம் மாநகர மக்கள் ஹெல்மட் அணிய முன் வருவதில்லை என்றும் இது தனது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். 

மேலும் மக்கள் ஹெல்மெட் அணிய முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்றும் சாலை விபத்து என்பது சொல்லி வருவது இல்லை என்றார்.  தொடர்ந்து பேசிய அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு சாலை  விபத்துகளினால் ஏற்படும் உயிர் பலி 215 ஆக இருந்தது வேறு சில  குற்றங்கள் மற்றும் கொலை சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 75 ஆக மட்டுமே உள்ளது  என்று கூறிய அவர்,  சாலை விபத்தில் உயிர் இழப்பு 215 ஆக உள்ளது என்றும் இதுவே கடந்த 2017 ஆம் ஆண்டு 300 ஆக இருந்தது என்றார்.

 இந்த ஆண்டு தற்போது வரை 45 பேர் உயிரிழந்தனர் என்றும் இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெறும் 55 பேர் மட்டுமே உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.  முயற்சி  எடுக்க பட்டு வருகிறது என்றும் இன்னமும் முயற்சித்தால் சாலை  விபத்துகளினால் ஏற்படும் உயிர் பலியை  குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 ஹெல்மெட் அணிந்து பயணம்  செய்யாததால் 80 சதவீத அளவிற்கு உயிர்பலிகள் ஏற்படுகிறது என்றும் விபத்திற்கு காரணம் அதிவேகத்தில் வாகனத்தை இயக்குவதை காரணம் என்றார்.  இது போன்று சாலை விபத்தில் உயிர் இழப்பவர்கள் அதிக அளவில் இளைஞர்களை என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

 இதுபோன்று இருப்பவர்களின் குடும்பங்கள் எதிர்காலத்தை தொலைத்து நிற்கதியாக நிற்கின்றனர் என்று குறிப்பிட்ட அவர்,  எனவே சாலை விபத்துக்களை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்றால் அதில் கலந்துகொண்டு புகைப்படம் மட்டும் எடுத்துக் கொள்ளாமல் இன்றிலிருந்தாவது அனைவரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வோம் என்ற உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.