பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விபத்தில்லா பயணம் குறித்த மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த ஓவிய போட்டியில் மதுபோதையில் வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்து, ஹெல்மெட் அணியாமல் செல்லும் போது ஏற்படுகின்ற விபத்து உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஓவியங்களை மாணவர்கள் ஆர்வமுடன் வரைந்தனர்.
மேலும், சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்த பேச்சு போட்டிகளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கு மருத்துவ முகாம்!