உலக பிரசித்திப் பெற்ற சேலம் வெள்ளி பட்டறைகளில் பணிபுரிய அதன் உரிமையாளர்களால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளி மாநிலத் தொழிலாளர்கள் அழைத்து வந்து, சிவதாபுரம், பனங்காடு பகுதியில் தங்க வைத்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கரோனோ தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வெள்ளி பட்டறையில் வேலை பார்க்கும் வெளி மாநில தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனால் வெள்ளி பட்டறையில் வேலை பார்த்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கே அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
வேலையிழந்து தவிப்பதால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். தடை உத்தரவை மீறி வெளி மாநிலத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி போலீசார் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: