சேலம் மாநகராட்சியின் பொதுமக்கள் தங்களின் வீட்டு உபயோக பொருட்களை வாங்கும் இடமாக அக்ரஹார கடை வீதி, தேர்முட்டி, பட்டகோவில் ஆகிய விதிகள் விளங்கிவருகின்றன. இந்த வீதிகளை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பருவமழையின் இந்த முக்கிய வீதிகள் அனைத்தும் மழை மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியால் முழுமையாக சேதமடைந்த நிலையில், மூன்று மாதங்களை கடந்தும் சாலைகள் சீர் அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதி வழியாக பள்ளி குழந்தைகளை அழைத்து செல்பவர்கள், சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் விபத்துகளை தவிர்க்கும் விதமாக தார் சாலை போட வேண்டும் என அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க...தமிழ்நாடு பட்ஜெட் நிகழ்வுகள் உடனுக்குடன்.! உள்ளங்கையில்..!