ETV Bharat / state

அழைத்தார்கள்... சந்தித்தேன்; இணைந்துகொண்டேன்! ராதாரவி 'பளீச்'

சேலம்: நாடக நடிகர்கள் வாக்குக்கு பணம் வாங்காமல் நேர்மையாக, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

File pic
author img

By

Published : Jun 13, 2019, 7:12 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவு கேட்டு, சேலம் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை சந்திக்க ராதாரவி இன்று (ஜூன் 13) சேலம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ராதாரவி கூறுகையில், 'தேர்தல் நேரத்தில் மட்டுமே நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் நாடக நடிகர்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் அவர்களை சந்திக்காமல் தவிர்த்தார்.

இந்த நேரத்தில் எல்லா நாடக நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது எல்லாம் பணம் வாங்காமல் வாக்களியுங்கள். பாக்யராஜ் அணியினரை வெற்றிபெறச் செய்யுங்கள்.

நடிகர்களுக்கு முதியோர் இல்லம் தேவை இல்லை. அவர்களை கவனித்துக் கொள்வது அவர்களின் பிள்ளைகளின் பொறுப்பு. அவர்களுக்கு உரிய உதவியை நாம் செய்தாலே போதும். விஷால், ஆர்யா, கார்த்தி ஆகியோர் படம் நடித்து நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்போம் என்றார்கள். ஆனால் அப்படி ஏன் நடக்கவில்லை. ஆகவே புதிய தலைமை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குத் தேவை' என்று தெரிவித்தார்.

ராதாரவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராதாரவி கூறியதாவது, ஒரு நடிகை குறித்து ஏதோ நான் சொன்னதாக தகவல் திமுக தலைமைக்கு தவறாக சென்று உள்ளது. அது குறித்து திமுக தலைவர் எதுவும் என்னிடம் கேட்கவில்லை.

ராதாரவி பேட்டி

வேறு யாரோ ஒருவர் என்னிடம் ராதாரவி கூட்டத்திற்கு யாரும் செல்லக் கூடாது என்று திமுக தொண்டர்களுக்கு தலைமை அறிவுறுத்தி உள்ளது.

ஆகவே மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என்று அதிமுகவில் சேர்ந்து கொண்டேன். ஏற்கனவே அதிமுகவில் 18 காலம் நான் இருந்திருக்கிறேன். பல பொறுப்புகள் வகித்துள்ளேன். முதலமைச்சரை சந்திக்க பலமுறை விருப்பம் தெரிவித்து இருந்தேன். நேற்று என்னை அழைத்தார்கள்... சந்தித்தேன்; அதிமுகவில் இணைந்து கொண்டேன். தலைமை குறித்து கருத்து சொல்லக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால் அது குறித்து நான் எதுவும் கூற இயலாது. அதிமுகவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று தெரிவித்தார்.

Intro:நாடக நடிகர்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் நேர்மையாக, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று நடிகர் ராதாரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Body:தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும் பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 7ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. மொத்தம் 117 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை வரை நடைபெறுகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது .

இந்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவு கேட்டு, சேலம் நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை சந்திக்க ராதாரவி இன்று சேலம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பேட்டியின்போது ராதா ரவி கூறுகையில், " தேர்தல் நேரத்தில் மட்டுமே நடிகர் விஷால் தலைமையிலான அணியினர் நாடக நடிகர்களை சந்தித்து வருகிறார்கள்.

அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஏன் அவர்களை சந்திக்காமல் தவிர்த்தனர்.

இந்த நேரத்தில் எல்லா நாடக நடிகர்களுக்கும் நான் கேட்டுக்கொள்வது எல்லாம் பணம் வாங்காமல் வாக்களியுங்கள் . பாக்யராஜ் அணியினரை வெற்றிபெறச் செய்யுங்கள்.

நடிகர்களுக்கு முதியோர் இல்லம் தேவை இல்லை .அவர்களை கவனித்துக் கொள்வது அவர்களின் பிள்ளைகளின் பொறுப்பு.

அவர்களுக்கு உரிய உதவியை நாம் செய்தாலே போதும். முதியோர் இல்லம் தேவையில்லாத ஒன்று. இதைத்தான் ஐசரி கணேஷிடமும் நான் வலியுறுத்தி உள்ளேன்.

முறைகேடுகள் தொடர்பாக, நடிகர் சங்க ஊழல் தொடர்பாக வழக்கு இருக்கிறது . அதனால் அது குறித்து விரிவாக பேச முடியாது .

விஷால் , ஆர்யா, கார்த்தி ஆகியோர் படம் நடித்து நடிகர் சங்கத்தை கடனிலிருந்து மீட்போம் என்றார்கள். ஆனால் அப்படி ஏன் நடக்கவில்லை .ஆகவே புதிய தலைமை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்குத் தேவை" என்று தெரிவித்தார்.

நேற்று ராதாரவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ராதாரவி விரிவாகப் பதிலளித்தார் .

அப்போது அவர்," அதிமுகவிலிருந்து திமுகவிற்கு ஏன் சென்றேன் அதுபோலத்தான் இதுவும் .

ஒரு நடிகையை குறித்து ஏதோ நான் சொன்னதாக தகவல் திமுக தலைமைக்கு தவறாக சென்று உள்ளது. அது குறித்து திமுக தலைவர் எதுவும் என்னிடம் கேட்கவில்லை.

வேறு யாரோ ஒருவர் என்னிடம் ராதாரவி கூட்டத்திற்கு யாரும் செல்லக் கூடாது என்று திமுக தொண்டர்களுக்கு தலைமை அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். ஆகவே மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக்கூடாது என்று அதிமுகவில் சேர்ந்து கொண்டேன்.

ஏற்கனவே அதிமுகவில் 18 காலம் நான் இருந்திருக்கிறேன் . பல பொறுப்புகள் வகித்துள்ளேன் .

முதலமைச்சரை சந்திக்க பலமுறை விருப்பம் தெரிவித்து இருந்தேன் . நேற்று என்னை அழைத்தார்கள் . சந்தித்தேன் .அதிமுகவில் இணைந்து கொண்டேன்.

தலைமை குறித்து கருத்து சொல்ல கூடாது என்று தெரிவித்திருக்கிறார்கள். அதனால் அது குறித்து நான் எதுவும் கூற இயலாது.

அதிமுகவிற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது" என்றார்.

மேலும் அவர்," திமுகவின் தற்போதைய தலைமை மீதான அதிருப்தி பலரிடையே உள்ளது. அது குறித்து என்னிடம் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். திமுகவில் உள்ள தலைமை மீது தொண்டர்களுக்கு குழப்பம் இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.

Conclusion:சேலம் நாடக நடிகர்களை முன்னதாக நடிகர் சரவணன், நடிகர் கருணாஸ் ஆகியோர் நேரில் சந்தித்து பாண்டவர் அணியினருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இன்று நடிகர் ராதாரவி சேலம் நாடக நடிகர்களை நேரில் சந்தித்து சுவாமி சங்கரதாஸ் அணிக்கு ஆதரவு கோரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.