ETV Bharat / state

கடனை திருப்பி செலுத்தாத பிரபல கிரானைட் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி! - பஞ்சாப் நேஷனல் வங்கி

சேலம்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாத கே.எம்.பி கிரானைட் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டது.

கடனை திருப்பி
author img

By

Published : Jul 24, 2019, 12:45 PM IST

பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் பிரபல கே.எம்.பி கிரானைட் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், நிறுவன வளர்ச்சிக்காக கிரானைட் நிறுவனத்தை அடமானம் வைத்து 40 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். அதில் ரூ.24 கோடி பணத்தை திருப்பிச் செலுத்திய கேஎம்பி நிறுவனம், மீதமுள்ள தொகையை திருப்பிச் செலுத்த இயலாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.

இதனையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்கள் நிறுவன உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனாலும் கடனை கே.எம்.பி. நிறுவனம் முழுமையாக செலுத்தவில்லை. இதனால் சேலம் நீதிமன்றத்தை அணுகிய பஞ்சாப் நேஷனல் வங்கி கே.எம்.பி கிரானைட் நிறுவனத்தை ஜப்தி செய்யும் அனுமதியை பெற்றது.

பிரபல கிரானைட் நிறுவனத்தின் சொத்துகள் ஜப்தி

இதையடுத்து இன்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கே.எம்.பி நிறுவனத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியின் அலுவலர்கள் ஜப்தி செய்ய முயன்றபோது, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சேலம் பள்ளப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கிரானைட் நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்ததையடுத்து, வங்கி அலுவலர்கள் நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்தனர்.

Intro:வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத சேலத்தின் பிரபல கிரானைட் நிறுவனத்தின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Body:சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது கே எம் பி என்னும் பிரபல கிரானைட் நிறுவனம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள், தமிழக அளவிலும் வெளி மாநிலங்களிலும் வெளி நாடுகளிலும் கிளை நிறுவனங்கள் அமைத்து கிரானைட் கற்கள் வணிகம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிறுவன வளர்ச்சிக்காக கிரானைட் நிறுவனத்தை அடமானம் வைத்து 40 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது.

அதில் 24 கோடி ரூபாய் பணத்தை திருப்பிச் செலுத்திய கே எம் பி நிறுவனம் மீதமுள்ள தொகையை திருப்பிச் செலுத்த இயலாமல், காலம் தாழ்த்தி வந்துள்ளது.

இதனையடுத்து பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் நிறுவன உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனாலும் கடனை முழுமையாக கே.எம்.பி. நிறுவனம் இருந்தது.

நாள் சேலம் நீதிமன்றத்தை அணுகிய பஞ்சாப் நேஷனல் வங்கி கே எம் பி கிரானைட் நிறுவனத்தை ஜப்தி செய்யும் அனுமதியை பெற்றனர்.

இதனையடுத்து இன்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கே எம் பி நிறுவனத்தை பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் ஜப்தி செய்ய வந்தனர் .

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வங்கி அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது .

இதனையடுத்து சேலம் பள்ளப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அனுமதிக்கவேண்டும் வேண்டும் என்று கிரானைட் நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்தனர்.

ஆனாலும் கிரானைட் நிறுவனத்தினர் வங்கி அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்க வாக்குவாதம் தொடர்ந்தது. பின்னர் ஒருவழியாக வங்கி அதிகாரிகள் நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்தனர்.

Conclusion:இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஜப்தி நடவடிக்கை தொடர்ந்ததால் ஐந்து ரோடு பகுதியில் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.