ETV Bharat / state

சுடுகாட்டுக்குப் பூட்டு: சேலத்தில் பரபரப்பு! - சேலம்

சேலம்: சுடுகாட்டில் பழுதடைந்த புகை வெளியேற்றும் சிம்னியை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சுடுகாட்டுக்கு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

File pic
author img

By

Published : May 11, 2019, 8:50 PM IST

சேலம் மாநகராட்சி மரவனேரி பகுதியில் காக்கையன் சுடுகாடு இருந்துவருகிறது. இதில் எரியூட்டப்படும் பிரேதங்களில் இருந்து வெளிவரும் புகையானது ராட்சத உயர சிம்னி வழியாக வெளியேற்றப்பட்டுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிம்னியின் பல்வேறு இடங்களில் சேதமடைந்து புகை அதன் வழியாக வெளியேறுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் துர்நாற்றம் வீசுவதாகவும், புகையின் சம்பல்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதாகவும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை எனவும் தெரிவித்தனர்.

சுடுகாடுக்கு பூட்டு

இந்நிலையில், பழுதடைந்துள்ள சிம்னியை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மயானத்தின் நுழையிலுக்கு பூட்டு போட முயற்சித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள் நிகழ்விடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீலநாயக்கன்பட்டியில் புதிதாக இடுகாடு கட்டும் பணிகள் முடிந்து, அது செயல்பாட்டுக்கு வர இருப்பதாகவும், அதுவரை இந்த சுடுகாட்டை பயன்படுத்தமாட்டோம் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

சேலம் 11.5.2019
M.kingmarshal stringer 

சேலம் மரவனேரி பகுதியில் இயங்கிவரும் காக்கையன் சுடுகாட்டில் பழுதடைந்த புகையை வெளியேற்றும் சிமிலியை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுடுகாட்டுக்கு பூட்டு போட முயன்றதால் பரபரப்பு... 

சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மரவனேரி பகுதியில் கடந்த 13 ஆண்டுகளாக காக்கையன் சுடுகாடு இயங்கி வருகிறது. இதில் எரியூட்டப்படும் பிரேதங்களில் இருந்து வெளிவரும் புகையானது ராட்சத உயர சிமிலி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக சிமிலியின் பல்வேறு இடங்களில் சேதமடைந்து புகைகள் கீழாகவே வெளியேறி வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவதாகவும், எரி துகள்கள் விழுவதாகவும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சிமிலியை சரி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மயானத்தின் கேட்டை பூட்டு போட முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் மற்றொரு இடுகாட்டு மையம் கட்டுமான பணிகள் முடிந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அது செயல்பாட்டுக்கு வந்த உடன் பழுதடைந்த சிமிலியை சரி செய்யும் வரை இந்த சுடுகாட்டை பயன்படுத்த மாட்டோம் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் திடீர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.