ETV Bharat / state

சேலம் சீர்மிகு நகரத் திட்டம்: இணையதளம் வாயிலாக மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

சேலம்: சீர்மிகு நகரத் திட்டப்பணிகளுக்காக பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

public enquiry
public enquiry
author img

By

Published : Feb 1, 2020, 9:46 PM IST

2016ஆம் ஆண்டு சீர்மிகு நகரத் திட்டத்தில் 2ஆம் கட்டமாக சேலம் மாநகராட்சி தேர்வுசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, மொத்தம் ரூ.945.15 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சீர்மிகு நகரங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வித் தரம், சுகாதார மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் 'எனது நகரம் எனது பெருமை' என்பதன் அடிப்படையில் எளிதான வாழ்க்கை குறித்த கருத்துக் கணக்கெடுப்பு இன்று தொடங்கி வருகின்ற 29ஆம் தேதி வரை நடைபெறும்.

public enquiry
சேலம் மாநகராட்சி வெளியிட்டுள்ள விளம்பரம்

பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவுசெய்யும் வகையில் கியூ ஆர் கோடுடன் விளம்பரங்கள் வெளியிடப்படும். இந்த கியூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால், மாநகராட்சி இணையதள பக்கத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். இவ்வினையதள பக்கத்தில் பெண்களின் பாதுகாப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், மின்சார வசதிகள் குறித்து மொத்தம் 24 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பதில்களை பொதுமக்கள் இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து தேர்வுசெய்து பதிவிட வேண்டும்.

இவ்வாறு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களைக் கொண்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்மிகு நகர திட்டப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து தரப்பினரும் இந்தக் கருத்துக் கணக்கெடுப்பில் பங்குகொண்டு தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: ரூ.790 கோடிக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்!

Intro:சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ்
எளிதான வாழ்க்கை குறித்த கருத்துக் கணக்கெடுப்பு
01.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெறும்
பொதுமக்கள் ஆர்வமாக பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் சேலம்
மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Body:
2016- ஆம் ஆண்டு சீர்மிகு நகர திட்டத்தில் 2-ம் கட்டமாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து விரிவான திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு மொத்தம் ரூ.945.15 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீர்மிகு நகரங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வி தரம், சுகாதார மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், அவசர கால உதவிகள், பெண்களின் பாதுகாப்பு, பொழுது போக்கு அம்சங்கள், பசுமை வெளிகள் மற்றும் மின்சார வசதி போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில் 'எனது நகரம் எனது பெருமை' என்பதன் அடிப்படையில் எளிதான வாழ்க்கைக் குறித்த கருத்துக் கணக்கெடுப்பு 01.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெறும்.

பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யும் வகையில் கியூ ஆர் கோடுடன் விளம்பரங்கள் வெளியிடப்படும்.

பொதுமக்கள் தங்களது ஆன்ட்ராயிடு கைபேசியில் பிளே ஸ்டோர் செயலியின் மூலம் கியூ ஆர் ஸ்கேனர் செயலியின் பதிவிறக்கம் செய்து, வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்திலுள்ள கியூ ஆர் கோடினை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட கியூ ஆர் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

இதன் பின்னர் மாநகராட்சி இணையதள பக்கத்துடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். இவ்வினையதள பக்கத்தில் குடிமக்களின் கருத்து என குறிப்பிடப்பட்டுள்ள பக்கத்தில் தமிழ்நாடு மாநிலம் எனவும், சேலம் நகரம் எனவும் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் இக்கருத்துக் கணக்கெடுப்பில் பங்குகொள்ளும் பொதுமக்கள் தங்களது பெயர், வயது, கைப்பேசி எண், பாலினம் குறித்த விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்னர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கை திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வி தரம், சுகாதார மேம்பாடு, தூய்மையான பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், அவசர கால உதவிகள், பெண்களின் பாதுகாப்பு, பொழுது போக்கு அம்சங்கள், பசுமை வெளிகள், மின்சார வசதி மற்றும் பிற வளர்ச்சி பணிகள் குறித்த 24 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பதில்களை பொதுமக்கள் இணைய தளத்தில் வழங்கப்பட்டுள்ள விபரங்களிலிருந்து தேர்வு செய்து பதிவிட வேண்டும். இவ்வாறு பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களைக் கொண்டு சேலம் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்மிகு நகர திட்டப் பணிகளை மேம்படுத்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Conclusion:எனவே, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள், மாணவ/மாணவியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வு அமைப்புகள் முன்வந்து 01.02.2020 முதல் 29.02.2020 வரை நடைபெறும் கருத்துக் கணக்கெடுப்பில் பங்குகொண்டு கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.