ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள் -  அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

சேலம்: ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை
author img

By

Published : Aug 18, 2019, 5:36 AM IST

சேலம் மாவட்டம் ஒமலூர் பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியின் பின்புறம் இந்தியன் ஆயில் கேஸ் சிலிண்டர் நிரப்பும் தொழிற் கூடம் உள்ளது. இந்த நிறுவனத்தின் எதிர்புறம் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள், இடிக்கப்பட்ட கட்டடங்களின் பொருட்கள் குவியலாக கொட்டப்பட்டுகிறது. பின்னர் இந்த குப்பைகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இந்நிலையில், 24 மணி நேரமும் இந்தப் பகுதியில் குப்பை கழிவுகள் எரிவதால், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள், இங்கு குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க வலியுறுத்தி, ஓமலூர் நகராட்சி, கருப்பூர் பஞ்சாயத்து அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குப்பை கழிவுகள் எரியும் இடத்தின் மிக அருகாமையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் கம்பெனி செயல்பட்டு வருவதால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்தப் பகுதியை முழுமையாக கண்காணித்து குப்பை கழிவுகள் கொட்டப்படுவதையும், அவற்றை தீ வைத்து எரிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் 24 மணி நேரமும் குப்பை கழிவுகள் தீப்பற்றி எரிந்து வருவதால் பல்வேறு சுவாச கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Body:சேலம் அடுத்த ஓமலூர் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. அரசு பொறியியல் கல்லூரியின் பின்புறம் இந்தியன் ஆயில் கேஸ் சிலிண்டர் நிரப்பும் தொழிற் கூடம் உள்ளது.

ஐஓசி நிறுவனத்தின் எதிர்புறம் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் இருபுறமும் இறைச்சிக் கழிவுகள் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் இடிக்கப்பட்ட கட்டடங்களின் பொருட்கள் குளியல் குவியலாக கொட்டப்பட்டு வருகின்றன.

மேலும் இறைச்சிக் கழிவுகள் பிளாஸ்டிக் குப்பைகள் தீ வைக்கப்படும் எரிக்கப்படுகிறது 24 மணி நேரமும் இந்தப் பகுதியில் குப்பை கழிவுகள் எரிவதால், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

தொடர்ந்து குப்பை கழிவுகள் எரிந்து புகையை கக்கி வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

குப்பை கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவதை எதிர்த்து, அதை தடுக்க வலியுறுத்தி, ஓமலூர் நகராட்சி மற்றும் கருப்பூர் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

குப்பை கழிவுகள் எரியும் இடத்தின் மிக அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கேஸ் சிலிண்டர் கம்பெனி அமைந்துள்ளது. இதனால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் சேதம் உண்டாகும் ஆபத்து உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்தப் பகுதியை முழுமையாக கண்காணித்து குப்பை கழிவுகள் கொட்டப்படுவதையும், அவற்றை தீ வைத்து எரிக்கப்படுவதையும் முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(பேட்டி - சண்முகவேலு, சமூக ஆர்வலர், ஓமலூர்)

Conclusion:24 மணி நேரமும் அதிக அளவிலான வாகன போக்குவரத்து நிறைந்த சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்படுவது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே ஓமலூர் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.