Honor killing: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாதிய எதிர்ப்பு அமைப்பினர் ஒன்றிணைந்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: Library: டிஐஜி அலுவலகத்தில் நூலகம் - காவலர்களின் பணிச்சுமையை குறைக்க ஏற்பாடு