ETV Bharat / state

உயிரோடிருந்த முதியவருக்கு  இறப்புச் சான்றிதழ்: விசாரணை வளையத்தில் தனியர் மருத்துவமனை - சேலம் சிம்ஸ் மருத்துவமனை

சேலம்: உயிரோடிருந்த முதியவருக்கு  இறப்புச் சான்றிதழ்  வழங்கிய தனியார் மருத்துவமனை நிர்வாகத்தியிடம் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிம்ஸ் மருத்துவமனை
சிம்ஸ் மருத்துவமனை
author img

By

Published : Oct 16, 2020, 10:57 PM IST

சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த முதியவர் பாலசுப்பிரமணிய குமார் (74). இவர் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி, இறந்துவிட்டதாகக் கூறி அவர் தம்பி குளிர்பதன பெட்டியில் அடைத்துவைத்தார்.

இந்த விவகாரத்தில் அவரது சகோதரர் சரவணன் (70) மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று (அக்டோபர் 16) முதியவர் பாலசுப்பரமணிய குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மலர்விழி விசாரணை நடத்திவருகிறார்.

பாலசுப்பரமணிய குமார் இறந்துவிட்டதாக சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இறப்புச் சான்றிதழ் கொடுத்ததாக சரவணன் விசாரணையில் தெரிவித்தார். அதன்பேரில், அந்த மருத்துவமனையிலும் இணை இயக்குநர் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் மருத்துவமனைக்கு பாலசுப்பரமணிய குமாரை சிகிச்சைக்காக அனுமதிக்க அழைத்து வரப்பட்ட சிசிடிவி காட்சிகள், சான்றிதழ்கள், ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வாறு சான்றிதழ்கள் இருக்கும் பட்சத்தில் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அறிக்கைகள் அனுப்படும் என்று கூறப்படுகிறது.

பாலசுப்பிரமணியன் குமார் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது எந்த நிலையில் இருந்தார் என்பது குறித்தும் டீன் பாலாஜிநாதனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.