ETV Bharat / state

சேலம் அரசு மருத்துவமனையில் கைதி போராட்டம்!

author img

By

Published : Apr 24, 2021, 9:53 PM IST

சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர் சிறுநீரக நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யக்கோரி போராட்டம் நடத்தினார்.

போராட்டத்தில் கைதி
போராட்டத்தில் கைதி

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணபதி (34). இவர் 2019ஆம் நடைபெற்ற கொலை வழக்குத் தொடர்பாக சங்ககிரி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைதி கணபதிக்கு சிறுநீரக நோய் ஏற்பட்டதால், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 24) கைதி கணபதிக்கு உடல்நிலை பாதித்ததால் உடனே அவரை மத்தியச் சிறையிலிருந்து காவல் துறை பாதுகாப்புடன், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவர்களைச் சந்திக்க அழைத்துச் செல்லப்பட்டார்.

இவரை ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் கரோனா பரவல் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. இதனால் வேதனை அடைந்த கணபதி, திடீரென தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

மேலும் தான் சிறுநீரப்க பிரச்சினையால் அவதிப்படுவதால் உடனே தனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி கண்ணீர்விட்டார். இது பற்றி தகவலறிந்த காவல் துறை அலுவலர்கள் விரைந்துவந்து கணபதியை சமரசம் செய்தனர்.

தற்போது கரோனா தாக்கத்தின் காரணமாக முக்கியமான அறுவை சிகிச்சைகள் மட்டும் செய்யப்படுகின்றன. இன்னும் சில வாரங்களில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சமாதானமான கணபதியை காவல் துறையினர் மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.