தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு மாநில நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு பூர்ண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் உடல்நிலையை பின்தொடர்ந்து கண்காணிக்க ஏதுவாக கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கான ஒருங்கிணைந்த பிந்தைய கால கவனிப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கி வைத்தார்.
சேலம் அரசு மருத்துவமனையில் இதுவரை மூன்று லட்சத்து 72,000 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பரிசோதனை முடிவுகள் ஆன்லைன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவுகள் 6 முதல் 8 மணி நேத்திற்குள் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மையத்தில், கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு சுவாச பயிற்சி, உணவு முறை, உளவியல் அறிவுரைகள் ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது.
மேலும், இன்று உலக ஸ்டோக் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுவதை யொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, மாவட்ட ஆட்சியர் ராமன், அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் மற்றும் மருத்துவர்கள் வெளியிட்டனர்.