பல ஆண்டுகளாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை கடந்த ஒன்பதாம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பலர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு மாநிலச் செயலாளர் முகமது பாய்ஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 21 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சேலம் மத்திய சிறையில் பட்டுப்புழு வளர்ப்பு மையம் தொடக்கம்