சேலம்: அரசு ஊழியர்கள் கொண்டாடிய கருப்பு பொங்கல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தி அவர்கள் இந்தப் பொங்கலை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் , காடையாம்பட்டி அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் கருப்பு பொங்கல் இன்று (ஜன.17) கொண்டாடப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கருப்பு ஆடை அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
அதன்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.
இதற்காகவே, தாங்கள் இந்த கருப்பு ஆடைகளை அணிந்து பொங்கல் கொண்டாடுவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நல சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களின் கருப்பு பொங்கல் கொண்டாட்ட வீடியோ வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: MGR Birthday: ஆயிரம் அடி நீளத்திற்கு எம்ஜிஆர் பேனர்