தருமபுரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருபவர் காவலர் ராமகிருஷ்ணன். கபடி வீரரான இவர், தமிழ்நாடு அளவில் கபடி போட்டிகள் நடந்து வருவதை அறிந்து, மாநில அணியில் இடம்பெற முயற்சி செய்துள்ளார்.
ஆனால், கடுமையாக போராடியும் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்த ராமகிருஷ்ணன், சேலம் வந்துள்ளார்.
சேலம் வீட்டிலும் யாரிடமும் சரியாக அவர் பேசவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், நேற்று ராமகிருஷ்ணன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்திள்ளார்.