சேலத்தில் இன்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ மேல் படிப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், பாரதிய ஜனதா அரசின் சமூக நீதி மறுப்பை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் மணி, "தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் எடப்பாடி அரசு மாநிலத்திற்கான சிறப்புத் தன்மையை இழந்து வருகிறது. நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு விழா கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும். அதற்கு ஏற்பாடுகள் செய்த எங்களுக்கு மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் பாரதிய ஜனதா சார்பில் வேல் யாத்திரை நடத்தப்படுவதற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு தலைமை இயக்குநரை சென்னையில் சந்தித்து மனு அளிக்க உள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க:“வீடுதோறும் வேல் பூஜை செய்து, கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்” - பாஜக மாநில தலைவர் முருகன்!