ETV Bharat / state

ரூ.300 கோடி தருவதாகக் கூறி விவசாயிகளிடம் ஒரு கோடி மோசடி - கும்பல் கைது - Police arrested a gang for cheating

நாமக்கல்: வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்பில் இருந்து 300 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகக் கூறி விவசாயிகளிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த 4 பேரை சேலம் மாநகர காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

fraud gang, மோசடி கும்பல் கைது
fraud gang, மோசடி கும்பல் கைது
author img

By

Published : Jan 14, 2020, 11:55 PM IST

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. விவசாயியான இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த 7 பேர் கொண்ட கும்பல் நன்கு பழகி வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளில் இருந்து தங்களுக்கு 300 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாகவும் அந்தப் பணத்தை தங்களுக்கும் பங்கிட்டுத் தருவதாகவும்; பணம் கிடைப்பதற்கு ஆவணங்கள் தேவைப்படுவதால் பணம் செலவாகும் எனவும் கூறி அருள் ஜோதியிடம் 40 லட்சம் ரூபாயை வாங்கி உள்ளனர்.

இதற்கிடையே முன்விரோதம் காரணமாக அருள்ஜோதி கொலை செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து அருள்ஜோதியின் உறவினரான விவசாயி பழனிவேல் என்பவரிடம் அருள்ஜோதியின் நண்பர்கள் எனக் கூறி அறிமுகமாகும் அந்தக் கும்பல், அவரிடமும் முன்பு போன்றே 300 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது எனவும், அதை பங்கீட்டுத் தருவதற்குக் கடந்த சில மாதங்களாக 60 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பழனிவேலிடம் பரிசுத் தொகை வந்துவிட்டதாகவும் அதனை வழங்குவதற்கு மிகப்பெரிய விழா நடத்த வேண்டும் என்றும் அதற்கு பத்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது எனவும் அந்த கும்பல் கூறியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த விவசாயி பழனிவேல் சேலம் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி செய்த கும்பலை தேடிவந்த நிலையில் நேற்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் சிவகுமார், நிசாந்த், அஸ்வின், மாதேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

விவசாயிடம் ஏமாற்றிய கும்பல்

இது குறித்து சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் செந்தில் குமார் கூறும்போது, 'பரிசுத்தொகை விழுந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகம் எனப் பல்வேறு வகைகளில் ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் மோசடி கும்பல்கள் அதிகரித்து உள்ளன. எனவே இதுபோன்ற மோசடி செயலில் ஈடுபடுபவர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் 18 சவரன் நகைகள், ரூ.1 லட்சம் கொள்ளை

Intro:வெளிநாட்டில் உள்ள கிறிஸ்துவ அமைப்பில் இருந்து 300 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாக கூறி விவசாயிடம் ஒரு கோடியே 17 லட்சம் மோசடி செய்த 4 பேரை சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்....Body:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி. விவசாயம் செய்து வரும் அருள்ஜோதியிடம் அதே ஊரை சேர்ந்த 7 பேர் சேர்ந்த கும்பல் நன்கு பழகி வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளில் இருந்து தங்களுக்கு 300 கோடி ரூபாய் பரிசு விடுத்துள்ளதாகவும் அந்தப் பணம் கிடைப்பதற்கு ஆவணங்கள் தேவைப்படுவதால் பணம் செலவாகும் எனக் கூறி அருள் ஜோதிடம் 40 லட்ச ரூபாயை வாங்கி உள்ளனர். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக அருள்ஜோதி கொலை செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து அருள்ஜோதியின் உறவினரான விவசாயி பழனிவேல் என்பவரிடம் அருள்ஜோதியின் நண்பர் எனக் கூறி அறிமுகமாகி தங்களுக்கும் 300 கோடி ரூபாய் வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்பிலிருந்து பரிசுத்தொகை விழுந்துள்ளது என்றும் இதற்கு செலவு செய்ய சிறிது பணம் தேவைப்படுகிறது எனக்கூறி கடந்த சில மாதங்களாக 60 லட்ச ரூபாயை பெற்றுள்ளனர். தொடர்ந்து பழனிவேலிடம் தங்கள் தொகை வந்து விட்டதாகவும் அதனைப் பெறுவதற்கு மிகப்பெரிய விழா நடத்த வேண்டும் என்றும் அதற்கு பத்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என அந்த கும்பல் தெரிவித்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த விவசாயி பழனிவேல் சேலம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி செய்த கும்பலை தேடி வந்த நிலையில் நேற்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் சிவகுமார், நிசாந்த், அஸ்வின், மாதேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் செந்தில் குமார் கூறும்போது, பரிசுத்தொகை விழுந்துள்ளது, ஆன்லைன் வர்த்தகம் என பல்வேறு வகைகளில் ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் மோசடி கும்பல் ஈடுபட்டு வருவது அதிகரித்து உள்ளது. எனவே ஏமாற்றி மோசடி செயலில் ஈடுபடுபவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.