சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்ற வாரம் ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மேச்சேரி பேருந்து நிலையத்தில் அவருக்கும், காவலர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது.
இதனை அடுத்து ராணுவ வீரரை கைது செய்த காவல்துறையினர், மேச்சேரி காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தகவலை கேள்விப்பட்ட தர்மராஜின் உறவினர்கள் மேச்சேரி காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளனர். ஆனால் அவர்களையும் போலீசார் தாக்கி காவல் நிலையத்தை விட்டு விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது .
ராணுவ வீரரை கைது செய்து துன்புறுத்தும் காவல்துறையினர்! - சேலம்
சேலம் : மேச்சேரி காவல் நிலையத்தில் முறையான புகார்கள் இல்லாமல் ராணுவ வீரரை கைது செய்து அடித்து துன்புறுத்துவதாக அவரின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்ற வாரம் ஊருக்கு திரும்பி வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மேச்சேரி பேருந்து நிலையத்தில் அவருக்கும், காவலர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது.
இதனை அடுத்து ராணுவ வீரரை கைது செய்த காவல்துறையினர், மேச்சேரி காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, தகவலை கேள்விப்பட்ட தர்மராஜின் உறவினர்கள் மேச்சேரி காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளனர். ஆனால் அவர்களையும் போலீசார் தாக்கி காவல் நிலையத்தை விட்டு விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது .
Body:மேச்சேரி பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் கடந்த 17 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தின் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு மேச்சேரி பேருந்து நிலையத்தில் அவருக்கும் மேச்சேரி காவலர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து ராணுவ வீரரை கைது செய்த போலீசார் மேச்சேரி காவல் நிலையத்தில் அவரை வைத்து இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தகவலை கேள்விப்பட்ட தர்மராஜின் உறவினர்கள் மேச்சேரி காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்து உள்ளனர்.
ஆனால் அவர்களையும் போலீசார் தாக்கி காவல் நிலையத்தை விட்டு விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது . மேச்சேரி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் தாக்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இரவு முழுவதும் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்ட ராணுவ வீரர் தர்மராஜ் மீட்டுத்தருமாறு அவரின் தாயார் பழனியம்மாள், சகோதரி கற்பகம், சகோதரன் சக்திவேல் ஆகிய மூவரும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ வீரர் தாயார் பழனியம்மாள் கூறுகையில், " சென்ற வாரம் சனிக்கிழமை தான் தர்மராஜ் ஊருக்கு திரும்பி வந்தார்.
நேற்று பேருந்து நிலையத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை . அவரை மேச்சேரி காவலர்கள் இழுத்துச் சென்று அடித்து கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.
அவரை போலீசாரிடம் இருந்து உயிரோடு மீட்டுத்தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்" என்று கண்ணீரோடு தெரிவித்தார்.
ராணுவ வீரர் தர்மராஜின் சகோதரர் சக்திவேல் கூறும்போது ," அண்ணனை வெளியில் அழைத்து வரலாம் என்று தகவல் அறிந்ததும் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன்.
ஆனால் என்னையும் போலீசார் கடுமையாக தாக்கி வெளியே விரட்டி அடித்தனர் . பயிற்சிக்கு வந்த காவலர்களைக் கூட அழைத்து வந்து மேச்சேரி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அண்ணனையும் என்னையும் அடித்து துன்புறுத்தினர்.
இதனால் செய்வதறியாது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறோம். " என்று தெரிவித்தார்.
Conclusion:ராணுவ வீரரை போலீசார் அடித்து துன்புறுத்திய விவகாரம் குறித்து உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.