ETV Bharat / state

குற்றவாளியை பிடிக்கச் சென்ற இடத்தில் கரோனாவுடன் வந்த காவலர் - கரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்

சேலம்: அழகு நிலையத்தில் பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்த புகாரில் குற்றவாளிகளை கைது செய்ய சென்ற காவல் துறையினருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்
காவல் துறையினருக்கு கரோனா உறுதி
author img

By

Published : Jun 2, 2020, 3:23 AM IST

சேலம் தாதாகாப்பட்டியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் தான் நடத்தி வரும் அழகு நிலையத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தார் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பெயரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் லோகநாதனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவருடன் இரண்டு குற்றவாளிகளும் கைதுசெய்யப்பட்டனர். அதனையடுத்து அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் லோகநாதனுக்கு கரோனா இருப்பது உறுதியானது. உடனே அவர் சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்ற இரண்டு கைதிகளும் ஓமலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதன் பிறகு டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பழனியம்மாள் உள்ளிட்ட 14 காவலர்களும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, அவரவர் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டனர்.

அதே போல அருகில் உள்ள டவுன் காவல் நிலையத்தின் ஆய்வாளர் குமார், உதவி ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட 34 காவலர்கள் தனியார் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த தகவல்கள் சேலம் போலீசாரை அதிர்ச்சியில் வைத்துள்ள நிலையில், இன்று கொண்டலாம்பட்டி காவலர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் காவலர்கள் பீதியில் உள்ளனர்.

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர் தற்போது, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் .

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.