ETV Bharat / state

ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு போதும் பலிக்காது  -  ராமதாஸ் - சேலம்

சேலம்: ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒரு போதும் பலிக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

டாக்டர் ராமதாஸ்
author img

By

Published : Apr 14, 2019, 9:53 PM IST

சேலம் தொகுதி மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர். எஸ். சரவணனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கே.ஆர். எஸ். சரவணனை ஆதரித்து பேசினார். அப்போது, 'அதிமுக, பாஜக, பாமக கூட்டணி மெகா கூட்டணி இது வெற்றிக் கூட்டணி. கூட்டணி கட்சிகள் நல்ல நல்ல திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஒன்றுக்கும் உதவாத அறிக்கைகளாக உள்ளன.

முதலமைச்சர் கனவு காணும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருநாளும் பலிக்காது. அவர் நடக்கும் போதும் தூங்கும் போதும் காரில் போகும்போதும் முதலமைச்சராக ஆகிவிடவேண்டும், தன்னுடைய அப்பா உட்கார்ந்த முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று கனவு காண்கிறார். அது அவருக்கு கனவாகவே போய்விடும். 1949 இல் தொடங்கிய திமுக இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும். திமுகவை முடித்து வைப்பவர் ஸ்டாலின்தான்' என தெரிவித்தார்.

Intro:ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒரு போதும் பலிக்காது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சேலத்தில் தெரிவித்தார்.

Body:சேலம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே ஆர் எஸ் சரவணனை ஆதரித்து இன்று சேலம் கோட்டை மைதானத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது," அதிமுக பாஜக கூட்டணி மெகா கூட்டணி வெற்றிக் கூட்டணி. அதிமுக தேர்தல் அறிக்கையிலும் பாமக தேர்தல் அறிக்கையிலும் பாஜக தேர்தல் அறிக்கையிலும் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். அற்புதமான தேர்தல் அறிக்கையாக நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஒன்றுக்கும் உதவாத அறிக்கைகள். காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிப்பதாக அறிக்கையில் கூறி உள்ளது. ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் அவர்கள் வறுமையை ஒழிக்கவில்லை. முதலமைச்சர் கனவு காணும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருநாளும் பலிக்காது. அவர் நடக்கும் போதும் தூங்கும் போதும் காரில் போகும்போதும் முதலமைச்சராக ஆகிவிடவேண்டும், தன்னுடைய அப்பா உட்கார்ந்த முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்று கனவு காண்கிறார். அது அவருக்கு கனவாகவே போய்விடும். அதேபோல 1949 இல் தொடங்கிய திமுக இந்த தேர்தலோடு முடிந்து விடும். திமுகவுக்கு முற்றும் என்று, தொடர்கதையில் போடப்படுவது போல ஸ்டாலின் முடிவு எழுதிடுவார். திமுகவை முடித்து வைப்பவர் ஸ்டாலின்தான். மத்தியில் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக அமரப் போவது உறுதி. அதேபோல நமது எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும்பான்மையுடன் இடைத் தேர்தலில் வெற்றிபெற்று நிலையான ஆட்சி செய்யப் போவது உறுதி" என்று தெரிவித்தார்.

Conclusion:மேலும் , மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மும்பை புனே இடையே சிமெண்ட் சாலை போட்டு சாதனை படைத்தது போல பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கும் கொண்டு வந்திருக்கிறார் அதில் மேலும் தொடர வேண்டும் என்றும் ராமதாஸ் தனது பேச்சில் குறிப்பிட்டார். பின்னர் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களித்து மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறி வாக்காளர்களிடம் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.