தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஊராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், பிரதிநிதிகளுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடிய நிகழ்வில், பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவர் வருத ராஜ் தலைமையில் உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் பிரதமர் மோடியின் உரையை காணொலி காட்சி வாயிலாக கண்டு கேட்டறிந்தனர்.
கரோனா நோய் தொற்று பொதுமக்கள் மத்தியில் பரவவிடாமலிருக்க நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவின் நன்மையை, கிராமங்களில் வசிக்கும் கடைக்கோடி மனிதர் வரை பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் கொண்டுசென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவிலிருந்து கரோனோவை விரட்டியடிக்க பஞ்சாயத்து பிரதிநிதிகள் பாடுபட வேண்டும் என்றும் மோடி தனது காணொலி உரையில் கேட்டுக்கொண்டார்.
இதேபோல சேலம் மாவட்டத்தின் ஓமலூர் ஊராட்சி ஒன்றியம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், பிரதிநிதிகள் பிரதமர் மோடியின் காணொலி காட்சி உரையாடலை கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க... ஜனநாயகத்தின் 4ஆவது தூணை முடக்காதீர்கள்! கமல்ஹாசன் வேண்டுகோள்