தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நெகிழி விற்பனை குறித்து கடைகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அபராதமும் விதித்துவருகின்றனர்.
அதனடிப்படையில் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்தது குறித்து அலுவலர்கள் 5 ஆயிரத்து 572 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 52 ஆயிரத்து 423 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விற்பனை செய்ததற்காக 42 லட்சத்து 20 ஆயிரத்து 497 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 40 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை குறித்து கண்காணிக்க ஐந்து குழுக்கள், சேலத்தில் ஆய்வுப்பணியைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: