ETV Bharat / state

மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாற்றுத்திரனாளி! - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி வந்த மாற்றுத்திரனாளி பொதுமக்களிடம் மரக்கன்றுகள் நடுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மணிகண்டன்

author img

By

Published : Dec 23, 2019, 8:26 PM IST

காற்று மாசு ஏற்படுவதை தடுக்க மரக்கன்றுகளை நட வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளி பட்டதாரி வாலிபர் ஒருவர் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிளை ஓட்டி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மணிகண்டன்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இடதுகாலை அகற்றும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, காற்று மாசு, மரக்கன்றுகள் நடுவது போன்றவற்றை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் பிரயாணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தை கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இவர் இன்று சேலம் வந்தடைந்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன்

தினமும் 60 கிலோமீட்டர் வரை ஒற்றைக்காலில் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வழிநெடுக இருக்கும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் தனது பயணத்தை முடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒற்றைக்காலில் சைக்கிள் விழிப்புணர்வு பயணம்! - 3ஆவது வெற்றியை நோக்கி மாற்றுத்திறனாளி மணிகண்டன்...!

Intro:காற்று மாசு ஏற்படுவதை தடுக்க மரக்கன்றுகளை நட வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாற்றுத்திறனாளி பட்டதாரி வாலிபர், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் இணை இயக்கி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Body:ராமநாதபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சிறுவயதில் கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இடதுகாலை அகற்றும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, காற்று மாசு, மரக்கன்றுகள் நடுவது போன்றவற்றை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஒற்றைக்காலில் சைக்கிள் பயணத்தை கடந்த 13ஆம் தேதி தொடங்கிய அவர் இன்று சேலம் வந்தடைந்தார்.

தினமும் 60 கிலோமீட்டர் வரை ஒற்றைக்காலில் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஒற்றைக்காலில் சைக்கிள் மிதித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிநெடுக மரக்கன்றுகளை நடும் 6 பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார். ஜனவரி 1ம் தேதி சென்னையில் தனது பயணத்தை முடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேட்டி: மணிகண்டன் - ராமநாதபுரம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.