சேலம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்துள்ள வரகம்பாடி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் கல்குவாரியில் இருந்து வெளிவரும் பாறைத் துகள்களால் நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
கல்குவாரி மூட வேண்டும்
இது குறித்துப் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த நிலையில், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கல்குவாரியை மூட வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிராம மக்கள் மனு
இதனையடுத்து இன்று (அக்.4) வரகம்பாடி கிராம மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: புலியை சுட்டுக்கொல்ல காரணம் என்ன? - விளக்குகிறார் ஓசை காளிதாஸ்