ETV Bharat / state

மதுபாட்டிலுக்கு ரூ. 30 குறைவாக கொடுத்த குடிமகன் அடித்துக் கொலை!

சேலம்: கள்ளத்தனமாக மதுவை விற்றுவந்த மது வியாபாரி, மதுபாட்டிலுக்கு ரூ. 30 குறைவாகக் கொடுத்தவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதீஷ்
author img

By

Published : Jun 5, 2019, 2:45 PM IST

சேலம் அடுத்த உடையாப்பட்டி அருகே உள்ளது தாதம்பட்டி காலனி. இங்கு திலீப் என்பவர் நடத்திவந்த கள்ளத்தனமான மதுக்கடைக்கு, கக்கன் காலனியைச் சேர்ந்த சதீஷ் மது வாங்கச் சென்றுள்ளார். அப்போது ரூ. 130 விலையுள்ள மது பாட்டிலுக்கு ரூ. 100 மட்டுமே தருவதாகக் கூறி சதீஷ் திலீப்பிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த திலீப் 10 பேர் கொண்ட கும்பலுடன் சதீஷ் வீட்டிற்குச் சென்று அவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் தாயாரும் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார். தற்போது அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று காலை அரூர் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இக்கொலைச் சம்பவத்திற்கு காரணமான திலீப்பை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து திலீப் கள்ளத்தனமாக நடத்திவந்த மதுக் கடைக்குச் சென்ற பொதுமக்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினர். கொலைச் சம்பவம், கடை அடித்து நொறுக்கப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சேலம்
06.06.2019

கள்ளச் சந்தை மது விற்பனை மோதல்: ஒருவர் அடித்துக்கொலை

 சேலத்தில் கள்ளச் சந்தையில்  மது பாட்டில் வாங்கிய கக்கன் காலனியை சேர்ந்த சதீஷ் என்பவரை நள்ளிரவில் கும்பல் ஒன்று அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அடுத்த உடையாப்பட்டி அருகே உள்ள  தாதம்பட்டி காலனியில் திலீப் என்பவர் நடத்தி வந்த சந்து கடையில் , அதே பகுதியைச் சேர்ந்த  கக்கன் காலனி சதீஷ்  மது வாங்க சென்றுள்ளார் . 

130 ரூபாய் விலை உள்ள மது பாட்டிலுக்கு  சதீஷ் 100 ரூபாய் கொடுத்து சென்றதில் , தீலீப்புக்கும் சதீஷ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது .

இதனை அடுத்து  திலீப்குமார் 10 பேர் கொண்ட கும்பலை கூட்டிச்சென்று நள்ளிரவில் சதீஷ்குமார் வீட்டிற்குச் சென்று அவரைக் கடுமையாக  தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் உயிரிழந்துள்ளார் .

இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் , இன்று காலை சேலம் அரூர் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

அப்போது வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களத்  தடுத்தனர். ஆனால் ஆத்திரமடைந்த  பொதுமக்கள் , திலீப் நடத்தி வந்த கள்ள மதுக் கடையை அடித்து நொறுக்கினர்.

அதில், அங்கு பதுக்கி  வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள்  நொறுக்கப்பட்டன. சதீஷை  அடித்து கொலை செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போலீசாரிடம் வலியுறுத்தினர்.

திலீப்புடன் வந்த கும்பல்  தாக்கியதில் சதீஷின் தாயும்  தந்தையும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடும் சூழ்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ள  மதுபான கடையால் குடும்பமே சின்னாபின்னமாகிவிட்டதாக அப்பகுதி  மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.