சேலம் அருகே கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளயே மாணவியர் தங்கும் விடுதி ஒன்றும் செயல்பட்டுவருகிறது. விடுதியில் தங்கியிருந்த தாவரவியல் முதுநிலை இரண்டாமாண்டு மேற்படிப்பு படித்த மாணவி நிவேதா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மாணவிகள் சிலர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சூரமங்கலம் உதவி ஆணையர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவியின் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மாணவி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சர்க்கரை ஆலை ஊழியர் திருமலை என்பவரின் மகள் நிவேதா என்பது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மனமுடைந்த மாணவி, தனது பெற்றோருடன் காவல் நிலையம் சென்று புகாரளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மாணவி நிவேதா விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிவேதா மரணம் குறித்து தகவலறிந்த மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் குவிந்துவருகின்றனர். மாணவி நிவேதா ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்புக்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 18 சவரன் கொள்ளைச் சம்பவம்: சிசிடிவியில் சிக்கிய ரவுடி