சேலம்: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் கரோனா தொற்றை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஜனவரி 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜன. 16) சேலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சேலம் அஸ்தம்பட்டி, 5 ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, செவ்வாய்ப்பேட்டை , அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அத்துடன் ஏற்காடு சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், வாகன ஓட்டிகளை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
சேலத்த்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, 800க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காணும் பொங்கலன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கொண்டாட்டங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!