ETV Bharat / state

கல்குவாரி வெடி விபத்திலிருந்து தப்பிய சிறுவன்

author img

By

Published : Oct 30, 2020, 1:07 PM IST

சேலம்: ஓமலூர் அருகே கல்குவாரி வெடி விபத்திலிருந்து நல்வாய்ப்பாக சிறுவன் உயிர்தப்பினான்.

கல்குவாரியில் வெடி விபத்து
கல்குவாரியில் வெடி விபத்து

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த சங்கீதப்பட்டி அருகே உள்ள வெற்றிலைக்காரனூர் பகுதியில் கல்குவாரி செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்குவாரியை ஒட்டி வெற்றிலைக்காரன் ஊர் கோயில் பகுதி உள்ளது.

இந்தப் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்துவருகின்றன. இந்நிலையில் அந்தக் கல்குவாரியில் உள்ள பாறைகளை வெட்டி எடுப்பதற்காக வெடிவைப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலையில் கல்குவாரியில் பாறைகளுக்கு நடுவில் வெடிவைத்து வெடிக்கச் செய்யப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறிய பாறை துகள்கள் அருகில் உள்ள வீடுகளின் மேல் விழுந்து விபத்து ஏற்பட்டது.

வெற்றிலைக்காரனூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி சங்கீதா என்பவருடைய ஓட்டு வீட்டின் மீது பாறை கற்கள் விழுந்ததால் ஓடுகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.

பாறை கற்கள் வீட்டின் உள்ளே இருந்த சிறுவன் மீது விழவே சுதாரித்துக்கொண்ட அவன் கையால் அந்தக் கல்லை தள்ளிவிட்டு நூலிழையில் உயிர் தப்பினான்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரியின் முன்பு சென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்தக் குடியிருப்புப் பகுதியின் அருகில் கல்குவாரி செயல்படத் தடைவிதிக்க வேண்டும். கல்குவாரி தொடர்ந்து செயல்பட்டால் எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை.

இது சம்பந்தமாக உரிய அலுவலர்களிடம் ஏற்கனவே புகார் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நேரில் புகார் மனு கொடுக்க உள்ளோம்" என்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.