ETV Bharat / state

சேலம் இரும்பாலைப் பேராட்டம் மக்கள் போராட்டமாக வேண்டும் - தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் - #சேலம் இரும்பாலை பேராட்டம்

சேலம்: இரும்பாலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வரும் தொழிலாளர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற்றப்படவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

congress
author img

By

Published : Sep 11, 2019, 8:05 AM IST

சேலம் இரும்பு உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை கைவிட வலியுறுத்தி சேலம் இரும்பு ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து, 37 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் இரும்பாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது தொழிலாளர்கள் மத்தியில் பேசிய மோகன் குமாரமங்கலம், "சேலத்தின் அடையாளமாகத் திகழும் இரும்பாலையை தனியார் மயமாக்கிட பாஜக அரசு துடிக்கிறது. இரண்டாயிரம் கோடி ரூபாய் கடனுக்காக நாட்டின் நவரத்தினம் என்று சொல்லப்படும் சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.

பொதுத்துறை நிறுவனங்கள் மக்களின் சொத்து. அதற்காக இங்கு போராடி வரும் தொழிலாளர்களின் போராட்டம் பொது மக்களின் போராட்டமாக மாற வேண்டும்" என்று தெரிவித்தார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் இரும்பாலைத் தொழிலாளர்கள் தொடர்ந்து 37 நாட்களாகப் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. உடனடியாக தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு இந்த பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்" என்று கூறினார்

உருக்காலையைத் தனியார் மயமாக்கும் முயற்சியை முறியடித்து, பொதுத்துறையாக நீடிக்க செய்ய நடத்தப்படும் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெறும் என்றும் மோகன் குமாரமங்கலம் தெரிவித்தார்.

Intro:சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 37 நாட்களாக போராடி வரும் தொழிலாளர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக மாற்றப்படவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.

Body:சேலம் இரும்பு உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை கைவிட வலியுறுத்தி சேலம் இரும்பு ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ,இரும்பாலை வளாகத்தில் 37 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் இரும்பாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, நேரில் ஆதரவு தெரிவித்தார்.

தொழிலாளர்கள் மத்தியில் பேசிய மோகன் குமாரமங்கலம்," சேலத்தின் அடையாளமாக திகழும் இரும்பாலையை தனியார் மயமாக்கிட பாஜக அரசு துடிக்கிறது.

2,000 கோடி கடனுக்காக நாட்டின் நவரத்தினம் என்று சொல்லப்படும் சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் .

பொதுத்துறை நிறுவனங்கள் மக்களின் சொத்து . அதற்காக இங்கு போராடி வரும் தொழிலாளர்களின் போராட்டம் பொது மக்களின் போராட்டமாக மாற வேண்டும்" என்று தெரிவித்தார் .

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தொடர்ந்து 37 நாட்களாக அவர்கள் போராடி வரும் போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது .

உடனடியாக தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டு இந்த பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்" என்று கூறினார்

Conclusion:உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை முறியடித்து, பொதுத்துறையாக நீடிக்க செய்ய நடத்தப்படும் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றிபெறும் என்றும் மோகன் குமாரமங்கலம் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.