ETV Bharat / state

'பவாரியா' குழு தலைவன் சென்னையில் கைது! - pavariya group accused arrested

'தீரன்' படத்தில் வருவதுபோல உண்மைச் சம்பவம், சேலத்தில் நிகழ்ந்துள்ளது. சேலம் மற்றும் அதன்சுற்றுவட்டாரங்களில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளை, கொலை வழக்கில் தொடர்புடைய 'பவாரியா' கும்பல் தலைவனை போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர்.

பவாரியா குழு குற்றவாளி கைது
பவாரியா குழு குற்றவாளி கைது
author img

By

Published : Apr 9, 2022, 10:38 PM IST

சேலம்: தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருவது போல, 'பவாரியா' கும்பலைச் சேர்ந்தவரும், சேலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவருமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன்(54).இவரது வீடு தேசியநெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது.

வசதியான குடும்பம் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது வீட்டுக்குள் புகுந்த ”பவாரியா” கும்பல் ஒன்று தாளமுத்து நடராஜனை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு, வீட்டில் இருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டார்கள். வீட்டின் காவலாளி கோபால் என்பவரையும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுபோன்று தமிழ்நாட்டில், 40 இடங்களில், பெரிய அளவில் கைவரிசை காட்டி திருடியது ”பவாரியா”கேங்.

இந்த நிலையில் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு தொடர்பாக, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ், அசோக், ராகேஷ், பீனாதேவி, ஜெயில்தார்சிங்(56), பப்லு, சந்து ஆகிய 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கடந்த 2014-ம் ஆண்டு இவர்களில் ஜெயில்தார்சிங், அவரது மனைவி பீனாதேவி, சந்து, பப்லு ஆகிய நான்குபேரும் ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.

அதன்பின்னர் நான்குபேரும் இந்த வழக்குத்தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அவர்களுக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

தனிப்படை அமைத்து தேடல்: இதையடுத்து அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் செயில்தர் சிங்கை பிடிக்க உதவி ஆணையர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்க நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். தனிப்படை குழுவினர் ஜெயில்தர் சிங்கின் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாகத் தேடி வந்தனர். பஞ்சாப் மாநிலத்தில் ஜெயில்தர் சிங்கிற்கு தொடர்புடையவர்களை கண்காணித்து வந்த நிலையில், ஜெயில்தர் சென்னையில் தங்கியிருப்பதை உறுதிசெய்த போலீசார் சென்னை சென்று கைதுசெய்தனர்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயல்தர்சிங் சிறையில் அடைக்கப்பட்டார். 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலைவழக்கு குற்றவாளியை தற்போது தனிப்படை போலீசார் கைது செய்ததன்மூலம் இந்த வழக்கு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:அமெரிக்காவுக்கு கடத்த முயன்ற சிவலிங்கம் சிலை பறிமுதல்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.