சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மல்லிகுந்தம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் செல்லம்மாள் வைத்தியலிங்கம். இவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை உடனடியாக அகற்ற வேண்டும், அங்குள்ள பொதுமக்களை வெளியேற்ற வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனின் பாதுகாப்பு பணியில் உள்ள செந்தில்குமார் என்பவர் கூறியுள்ளார். மேலும், பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து செல்லம்மாளை கடுமையாக தாக்கியதுடன் கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்த செல்லம்மாள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினார். இது தொடர்பாக செல்லம்மாள் கூறுகையில், "அமைச்சர் செங்கோட்டையனின் பாதுகாப்பு காவலராக இருக்கும் செந்தில்குமார், அவரது மகன் இருவரும் என்னை நாள்தோறும் மிரட்டுகிறார்கள். கூலிப்படையை ஏவி கொலை செய்துவிடுவேன். நான் அமைச்சருடன் நெருக்கமாக உள்ளதால் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது" என்றார்.
அதைத் தொடர்ந்து, செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளதாக செல்லம்மாள் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செல்போன் திருடர்களை விரட்டிப் பிடிக்க முயன்ற நபர் - தப்பிச்சென்ற திருடர்கள்