சேலம் மாவட்டம், வீராணம் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களில் சாலை வசதி, குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள்கூறியதாவது,"எங்கள் பகுதியில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட வர முடியவில்லை.
இதனால் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதேபோல் குடிநீர், கழிவறை, பள்ளிக்கூடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கோரி பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் இந்தத் தேர்தலை புறக்கணிக்கிறோம்" என்றனர்.