ETV Bharat / state

பீர் பாட்டிலால் குத்தி ஒருவர் உயிரிழப்பு

author img

By

Published : Apr 11, 2021, 3:05 PM IST

சேலம்: பாரில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார்.

கிருபாகரன்
கிருபாகரன்

சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன்(40). தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் இவர் நேற்றிரவு, ஆனந்தா பாலம் அருகே உள்ள மதுபான கடையில் தனது நண்பர்கள் உசேன், சீனிவாசன் ஆகியோருடன் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மோகன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தார். இதற்கிடையில் மோகன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக கிருபாகரனின், மனைவியுடன் சுற்றித் திரிவதாகக் கூறி தகராறு செய்துள்ளார். தொடர்ந்து மீண்டும் மதுபான கடையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அப்போது மோகன் அவரது நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் பீர் பாட்டிலை உடைத்து கிருபாகரன், சீனிவசனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த கிருபாகரன், சீனிவாசன், தகராற்றைத் தடுக்க வந்த அம்ஜத் ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து தகராறு நடைபெற்ற இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்றுவந்த கிருபாகரன் இன்று (ஏப்ரல்.11) காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கை தற்போது, டவுன் காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து, முக்கிய குற்றவாளிகள் மோகன் உள்ளிட்ட 2 பேரைத் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.