சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் சுமார் 50 ஆண்டுக்கும் மேலான பழைய கட்டடடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. கட்டடம் பழுதடைந்து பயன்பாட்டுக்கு உகந்ததாக இல்லாததால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அவ்வூர் மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து அக்கோரிக்கையை ஏற்று ரூ. 2.72 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம், இரண்டு மாடியுடன் கூடிய புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் நிதி ஒதுக்கினார். புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்தப் பணியை நேற்று ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் திடீரென ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மாமண்டூர் துணை மின் நிலையத்திற்கு மின் விநியோகம் தொடக்கம்