ETV Bharat / state

சேலத்தில் தண்ணீரை சேமிக்கும் பணியில் பொதுமக்கள்!

சேலம் : ஓமலூர் அருகேயுள்ள தைலாகவுண்டனூர் ஏரியில், மேட்டூர் அணையின் உபரிநீரை சேமிக்க பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தூர்வாரும் பணியை தொடங்கினர்.

ஏறிகள் சீரமைக்கும் பணி
author img

By

Published : Sep 8, 2019, 8:37 PM IST

Updated : Sep 8, 2019, 10:44 PM IST

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி ஆகிய இரண்டு தாலுகாவிலும் 125 ஏரிகள், குளங்கள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது வறண்டு போயுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டமும் ஆயிரம் அடியைத் தாண்டியுள்ளது.

ஏரிகள் சீரமைக்கும் பணி.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள நூறு ஏரிகளை குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் சீரமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி ஓமலூர் அருகேயுள்ள அரங்கனூர் கிராமம் தைலாகவுண்டனூர் ஏரியை சீரமைக்கும் பணிகளை இன்று அலுவலர்கள் தொடங்கினர்.

இதில், ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பது, மழைநீர் ஏரிக்கு வரும் வகையில் கால்வாய்களை அமைப்பது போன்ற பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்றது. மேலும், ஏரியில் உள்ள கரைகளை அகலபடுத்தி உயரமாக்குதல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணியில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், விவசாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு சீரமைக்கும் பணி செய்து வருகின்றனர். இதுபோல், ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் குடிமராமத்து பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அணையின் உபரிநீரை குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ள, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும் என்றும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாய்கள் வழியாக இந்த ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்றும் ஓமலூர், காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தைலாகவுண்டனூர் ஏரியில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தூர்வாரும் பணியை தொடங்கினர்.

( மேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்புக: தமிழக அரசுக்கு சேலம் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை)Body:
தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின்கீழ் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் தூர் வாரப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஆகிய இரண்டு தலுக்காவிலும் 125 ஏரி மற்றும் குளங்கள் உள்ளன.

இந்த ஏரிகள் அனைத்தும் தற்போது வறண்டு போய் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டமும், இந்த பகுதிகளில் 1000 அடியை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள நூறு ஏரிகளை குடி மராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி ஓமலூர் அருகேயுள்ள அரங்கனூர் கிராமம் தைலாகவுண்டனூர் ஏரியை குடிமராமத்து பணிகள் திட்டத்தில் சீரமைக்கும் பணிகளை இன்று அதிகாரிகள் தொடங்கினர்.

இதில், ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பது, ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள மேடுபள்ளங்களை அகற்றி சமபடுத்துதல், ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயை சீரமைத்தல், இந்த பகுதியில் பெய்யும் மழைநீர் ஏரிக்கு வரும் வகையில் கால்வாய்களை அமைத்தல் போன்ற பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஏரியில் உள்ள கரைகளை அகலபடுத்தி உயரமாக்குதல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணியில் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள்,பொதுமக்கள் மற்றும்விவசாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பாக இந்த ஏரியில் அனைத்து பணிகளை செய்து முடித்து முழுமையாக தண்ணீர் தேங்கும் வகையிலும், மழைநீரை சேமிக்கும் வகையிலும் அனைத்து பணிகளையும் செய்து முடிக்க வேகமாக செய்து வருகின்றனர். இதேபோன்று ஓமலூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் குடிமராமத்து பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுவரும் நிலையில்,மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக நேற்று முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

Conclusion:
மேட்டூர் அணையின் உபரிநீரை குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டுள்ள, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்ப வேண்டும் என்றும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாய்கள் வழியாக இந்த ஏரிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும் என்றும் ஓமலூர், காடையாம்பட்டி வட்டார விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Sep 8, 2019, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.