ETV Bharat / state

இறந்ததாக கூறி உயிரோடிருந்த முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்! - salem district news

சேலம்: உயிரோடு இருந்த முதியவரை, இறந்ததாக கூறி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்த குடும்பத்தினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை சவப்பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்

author img

By

Published : Oct 14, 2020, 11:58 AM IST

சேலம் மாவட்டம் கந்தம்பட்டி அருகேயுள்ள பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனது அண்ணன் பாலசுப்பரமணிய குமார் இறந்த விட்டதாகக் கூறி நேற்று முன்தினம் (அக.12) குளிர்சாதனப் பெட்டி கடைக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்துள்ளார்.

உடனே கடைக்காரர்கள் சரவணன் விட்டிற்கு வந்து குளிர்சாதனப் பெட்டியை வைத்துச் சென்றனர். நேற்று (அக.13) மதியம் குளிர்சாதனப் பெட்டியை எடுக்க மீண்டும் கடைக்காரர்கள் வந்தள்ளனர்.

முதியவரை சவப்பெட்டியில் அடைத்து வைத்த கொடூரம்

அப்போது அந்தப் பெட்டியினுள் முதியவர் உயிரோடு இருந்ததை கடைக்காரர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முதியவரின் குடும்பத்தினர் கூறுகையில், "அவர் ஆன்மா இன்னும் அவரது உடலை விட்டு செல்லவில்லை. அதனால் தான் அவரது உயிர் பிரியும் வரை உடலை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவார்" என்று அலட்சியமாக கூறினார்கள்.

இதையும் படிங்க: ஏரியில் மூழ்கி அக்கா-தம்பி பலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.