ETV Bharat / state

அமமுக வேட்பாளரைப் பார்த்து இரட்டை விரல் காட்டிய மூதாட்டி - சேலத்தில் பரபரப்பு - தேர்தல் பிரச்சாரம்

சேலம்: வாக்கு சேகரிப்பின் போது அமமுக வேட்பாளரைப் பார்த்து இரட்டை விரலை காட்டிய மூதாட்டியின் செயலால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அமமுக வேட்பாளரைப் பார்த்து இரட்டை விரல் காட்டிய மூதாட்டி - சேலத்தில் பரபரப்பு
author img

By

Published : Apr 6, 2019, 4:31 PM IST

சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீரபாண்டி எஸ்.கே செல்வம் போட்டியிடுகிறார்.

இதையடுத்து இவர் தனது ஆதரவாளர்களுடன் சேலம் உடையாப்பட்டி பகுதியில் இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் மைக்கில் பேசி வாக்கு சேகரிக்கும்போது, மூதாட்டி ஒருவர் இரட்டை விரலை காட்டி எங்கள் ஓட்டு இரட்டை இலைக்குதான் என்பதை சைகையில் காட்டினார். இதைப் பார்த்து வேட்பாளர் எஸ்கே செல்வம் உட்பட அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர், “அது இல்ல மா. உங்கள் சின்னம் பரிசுப் பெட்டி. பரிசுப் பெட்டி சின்னத்திற்கு வாக்களியுள்ளங்கள்” என்று பலமுறை கூறி வாக்கு சேகரித்தனர்.

இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் எஸ்.கே. செல்வம், உங்களின் வாக்குகளை பரிசுப் பெட்டி சின்னத்தில் முத்திரை பதித்து மாபெரும் வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, பாட்டியின் சைகை குறித்து அக்கட்சியின் முக்கிய பிரதிநிதி ஒருவரிடம் கருத்து கேட்டபோது,

“சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் ஒருவாரத்துக்கு மேலாக நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம். ஆனால் வாக்காளர்கள் இன்னுமும் எங்களைப் பார்த்தால் இரட்டை இலைக்குதான் வாக்கு சேகரிக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இதை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை” என்று புலம்பினார்.

Intro:அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளரிடம் இரட்டை இலை சின்னம் காட்டிய பெண்மணி: சேலத்தில் சுவாரஸ்யம்.

Body:சேலம் உடையாப்பட்டி யில் வாக்கு சேகரிப்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ் கே செல்வத்திடம் இரட்டை விரலை காட்டி மூதாட்டி ஒருவர் கலகலப்பூட்ட சம்பவம் நடைபெற்றது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வீரபாண்டி எஸ் கே செல்வம் போட்டியிடுகிறார்.

எஸ் கே செல்வம் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் சேலம் உடையாப்பட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் மைக்கில் பேசி வாக்கு சேகரிக்கும் போது மூதாட்டி ஒருவர் இரட்டை விரலை காட்டி எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கு தான் என்பதை சைகையில் காட்டியது வேட்பாளர் எஸ் கே செல்வம் உட்பட அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உங்கள் சின்னம் பரிசு பெட்டி பரிசு பெட்டியில் ஓட்டுப்போடுங்க அம்மா.. என்று வேட்பாளரின் ஆதரவாளர்கள் அறிவித்தபோது மூதாட்டி ஒருவர் இரட்டை விரலை காட்டி எங்கள் ஓட்டு இதுக்கு தான் என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்த அவர், மீண்டும் அது இல்ல மா வரிசை பெட்டி பரிசு பெட்டி என்று பலமுறை கூறி வாக்கு சேகரித்தார்.

இது அங்கு இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் எஸ் கே செல்வம் உங்களின் வாக்குகளை பரிசு பெட்டியில் முத்திரை பதித்து மாபெரும் வெற்றி பெற செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து அக்கட்சியின் முக்கிய பிரதிநிதி ஒருவரிடம் கருத்து கேட்டபோது சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஒருவாரத்திற்கு மேலாக நாங்கள் வாக்கு சேகரித்து வருகிறோம்.

ஆனால் வாக்காளர்கள் இன்னுமும் எங்களை பார்த்தால் இரட்டை இலைக்கு தான் வாக்கு சேகரிக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

Conclusion:இதை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை' என்று புலம்பினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.