சேலம் மாவட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.என். லட்சுமணன் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வருகிறார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல். முருகன் இன்று அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு இதுவரை ரூ.15,000 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கி உள்ளது. அதையடுத்து தமிழ்நாட்டில் மத்திய அரசின் கிராமப்புற திட்டங்கள் மூலம் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 70 லட்சம் பேருக்கு தலா ரூ. 500 வீதம் அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவர், திமுக முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி மட்டுமல்ல, இன்னும் பல முக்கிய தலைவர்கள் எங்கள் கட்சியில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்களும் பாஜகவில் இணைவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்