ETV Bharat / state

சேலத்தில் கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் - அலுவலர்கள் ஆய்வு

author img

By

Published : Feb 1, 2020, 2:49 PM IST

சேலம்: கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விழா ஏற்பாடு பணிகளை அரசுத் துறை முதன்மைச் செயலர்கள் ஆய்வு செய்தனர்.

inspection
inspection

சேலம் மாவட்டம் தலைவாசல் வி.கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வருகின்ற 9ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். அதனைத் தொடர்ந்து விவசாயப் பெருவிழா, கண்காட்சி, கருத்தரங்கினையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவிற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

விழா ஏற்பாட்டு பணிகளை ஆய்வுசெய்த அரசு முதன்மைச் செயலர்கள்

இதனிடையே விழா ஏற்பாடு குறித்த முன்னேற்பாடு பணிகளை வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் அ.ஞானசேகரன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா, ஆத்தூர் சட்டபேரவை உறுப்பினர், பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'அழிந்துவரும் மோளை ஆடுகளைப் பராமரிக்க கால்நடை ஆராய்ச்சி நிலையம்'

Intro: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 9.2.2020 அன்று சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், பெரியேரி ஊராட்சி, வி.கூட்டுரோட்டில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளதை முன்னிட்டு, விழா முன்னேற்பாடு பணிகளை வேளாண் உற்பத்தி ஆணையர் / வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி , கால்நடைபராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால் மற்றும் பல்வேறு துறை இயக்குநர்கள் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அவர்களுடன் இணைந்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.Body:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 9.2.2020, ஞாயிற்றுக்கிழமை அன்று சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், பெரியேரி ஊராட்சி, வி.கூட்டுரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து, விவசாயப் பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை துவக்கி வைக்கவுள்ளதை முன்னிட்டு, விழா முன்னேற்பாடு பணிகளை வேளாண் உற்பத்தி ஆணையர் / வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கால்நடைபராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால் , கால்நடைபராமரிப்புத் துறை மற்றும் மருத்துவப் பணிகளின் இயக்குநர் அ.ஞானசேகரன், வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர் என்.சுப்பையன், வேளாண்மை விற்பனை ஆணையர் சிரு, ஆவின் மேலாண் இயக்குநர் எம்.வள்ளலார் , அவர்கள் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், அவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோருடன் இணைந்து இன்று (31.01.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 13.02.2019 அன்று தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு விதி எண் 110-ன் கீழ், சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், பெரியேரி ஊராட்சி, வி.கூட்டுரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் “புதிய ஒருங்கிணைந்த கால்நடை மற்றும் விலங்கு அறிவியலுக்கான உயர் ஆராய்ச்சி நிலையம்” அமைக்கப்படவுள்ளது என அறிவித்தார்கள். மேலும், அதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தலைவாசல், வி.கூட்டுரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வருகின்ற 9.2.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அடிக்கல் நாட்டி வைத்து, விவசாயப் பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை துவக்கி வைக்கவுள்ளார்கள். மேலும், இவ்விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்கள். இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடம் தேர்வு செய்யப்பட்டு, விழாவிற்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இவ்விழாவினை முன்னிட்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இதில் கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி, மீன்வள பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பிலும், உணவு, சிற்றுண்டி கடைகள் உள்ளிட்ட தனியார் அரங்குகளும் என சுமார் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. இதில் பல்வேறு வகையான கால்நடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், ஒவ்வொரு துறையிலும் உள்ள திட்டங்கள் குறித்து சாதனை விளக்க கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன. வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில் நவீன வேளாண் கருவிகள் வேளாண் உற்பத்திக்கும், கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு போன்றவற்றிற்கு தேவையான சாதனங்கள், விதைகள், தீவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதனை தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வேளாண் பெருமக்கள், பெருமக்கள், வேளாண்மை சார்ந்து தொழில் புரிவோர், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பார்த்து பயன்பெறும் வகையில் இக்கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவை இணைத்து மாபெரும் விவசாய பெருவிழாவாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சுமார் 25,000-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமரும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில் ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் பங்கேற்கவுள்ளதை முன்னிட்டு, குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அரசு செயலர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

Conclusion:
இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிரண் குராலா, ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, ஆவின் தலைவர் வி.ஜெயராமன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சி.பாலச்சந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குநர் மரு.மனோகரன், ஆவின் (பொது மேலாளர்) சி.விஜய்பாபு, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் புருஷோத்தமன், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் துரை, தலைவாசல் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் க.ராமசாமி, கால்நடை மருத்துவர்கள், பொதுப் பணித்துறை, வருவாய்துறை மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.