ETV Bharat / state

சேலத்திற்குத் திரும்புவோர் கவனிக்க! - undefined

சேலம்: கரோனா தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கையாக, வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் தங்கியிருந்து வருபவர்களை, மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே மாநகரப் பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

salem
salem
author img

By

Published : Apr 27, 2020, 1:56 PM IST

சேலம் மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் கரோனா தொற்று நோய் தடுப்புப்பணியாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வரும் இடங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் மற்றும் தொற்று நோய் பரவுவதைத் தவிர்க்கும் வகையிலும், தினந்தோறும் மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் வீடு வீடாகச் சென்று மருந்துகள், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் 80 வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி எல்லைப் பகுதி மற்றும் மாநகரப் பகுதிகளுக்குள் காவல் துறையினரின் சார்பில் 18-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு வார்டு
சிறப்பு வார்டு

இந்நிலையில் வெளி மாநிலங்கள் / பிற மாவட்டங்களிலிருந்து வருகை தரக்கூடியவர்கள் மற்றும் மாநகரப் பகுதியினை வசிப்பிடமாகக் கொண்டு, பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து, கரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகள், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

சிறப்பு மருத்துவ பரிசோதனை மையம்

அதனடிப்படையில் இன்று (27.04.2020) முதல் வெளிமாநிலங்கள் / பிற மாவட்டங்களிலிருந்து வருகை தரக்கூடியவர்கள் மற்றும் மாநகரப் பகுதியினை வசிப்பிடமாகக் கொண்டு பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கியிருந்து வருபவர்களை, மாநகராட்சி எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல் துறையினரின் சோதனைச் சாவடியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்ட பின்னரே, மாநகரப் பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனவும்,

கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளுக்காக மாநகராட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதையும் பார்க்க: அரசின் அறிப்பை காற்றில் பறக்க விட்ட விமான நிறுவனங்கள்! டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.