ETV Bharat / state

குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் புதிய பேட்டரி கார் அறிமுகம்!

சேலம்: குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கேற்ப புதிய பேட்டரி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

battery car
battery car
author img

By

Published : Mar 14, 2020, 9:47 PM IST

சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் ஏற்காடு மலை அடிவாரத்தில் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. பச்சை பசேல் என்று எழில் மிகுந்து காட்சி தரும் இந்தப் பூங்கா 75 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கடமான், முதலை, வெள்ளை மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

பேட்டரி வாகனத்தில் அமர்ந்து செல்லும் சுற்றுலா பயணிகள்

வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளைக் கண்டு ரசிக்க தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே கோடை விடுமுறை இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரியல் பூங்காவில் புதிய வகை பேட்டரி கார்கள் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக இன்று அறிமுகப்படுத்தப்பட்டன. வாகனங்களைக் கொடியசைத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர் .

மேலும், பூங்காவைச் சுற்றிப் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பேட்டரி காரில் அமர்ந்து உற்சாகத்துடன் பூங்காவைக் கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க: நாகர்கோவில் டூ நாசா: கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.