பள்ளிக்குழந்தைகளின் திறன்களை வளர்க்கும் நோக்கில் குதிரை ஏறும் போட்டியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான குதிரை ஏறும் போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில், தொடர்ந்து, 9ஆவது ஆண்டாக தேசிய அளவிலான குதிரை ஏறும் விளையாட்டுப் போட்டி சேலம் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி தனியார் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில், மூன்று வயது குழந்தைகள் முதல் 13 வயது வரையிலான குழந்தைகள் வரை கலந்து கொண்டு குதிரை மீது அமர்ந்து சாகசம் செய்து விளையாட்டில் கலந்து கொண்டனர். குதிரை மீது அமர்ந்து மித ஓட்டம், விரைவு ஓட்டம், ஓடுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் குழந்தைகள் குதிரைகளை ஓட வைத்து தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவற்றை அடக்கி, குழந்தைகள், நடக்க வைத்தும் ஓட வைத்தும் போட்டியில் ஈடுபட்டதை உற்சாகத்துடன் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க:
பாரதியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் விளையாட்டு போட்டிகள்!