ETV Bharat / state

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு! - மாவட்ட ஆட்சியர் ஏற்பு

சேலம் :நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்த 25 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

சேலம்
author img

By

Published : Mar 27, 2019, 11:21 PM IST

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல்நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 37 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து புதன்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், சேலம் மக்களவை தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு முன்னிலையில், ஆட்சியர் ரோகிணி தலைமையில் வேட்பாளர்கள், முகவர்கள் பங்கேற்றனர்.37 வேட்பாளர்கள் 47 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர் அதில் 12 வேட்பாளர்களின் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 25 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து,மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

சேலம் மக்களவைத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சடையன், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சிலம்பரசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன், சோசலிஸ்ட் யூனிட்டி ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) வேட்பாளர் பெ.மோகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.ராசா உள்ளிட்ட நான்கு பேர் அடங்குவர்.

இந்தநிலையில், வேட்புமனு பரிசீலனையில் சுயேட்சை வேட்பாளர் ஏ.பி.குமாரின் மனுவில் படிவம் 26 இல் முழுமையாக பூர்த்தி செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மனு நிராகரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனிடையே மனுவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி ஏ.பி.குமார் திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 29 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் - தேவராஜன்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

சேலம்(27.03.2019): சேலம்  நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அரசியல் கட்சியினர் கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 37 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதனிடையே புதன்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

இதில், சேலம் மக்களவை தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராஜேஷ் மஞ்சு முன்னிலையில், ஆட்சியர் ரோகிணி  தலைமையில் வேட்பாளர்கள், முகவர்கள் பங்கேற்றனர்.

சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட 37 வேட்பாளர்கள் 47 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் 12 வேட்பாளர்களின் 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தற்போது 25 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்புமனுக்களை திரும்ப பெற மார்ச் 29 ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

சேலம் மக்களவைத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சடையன், அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணன், திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களில் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சிலம்பரசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன், சோசலிஸ்ட் யூனிட்டி ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) வேட்பாளர் பெ.மோகன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அ.ராசா உள்ளிட்ட 4 பேர் அடங்குவர்.

இதுதவிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் உள்பட 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மொத்தம் 25 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே பாமகவில் இருந்து வந்து சுயேச்சையாக போட்டியிட விருப்பம் தெரிவித்த ஏ.பி.குமார் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
 
இந்தநிலையில் வேட்புமனு பரிசீலனையில் ஏ.பி.குமாரின் மனுவில் படிவம் 26 இல் முழுமையாக பூர்த்தி செய்யாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மனு நிராகரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மனுவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி ஏ.பி.குமார் திடீரென தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார் .
இதுதொடர்பாக அவர் கூறுகையில், என்னுடைய மனுவை நிராகரிக்க காரணமான அதிமுக, பாமக ஆகிய கட்சிகளை எதிர்த்து பிரசாரத்தைத் தொடங்குவேன். அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்க்கும் விதமாக பாமகவில் இருந்து வெளியே வந்து சுயேச்சையாக போட்டியிட மனு செய்தேன் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.