சேலம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்த பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் வாகன சோதனையின்போது சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி தாக்கி, இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உயிரிழந்தார்.
முருகேசனை உதவி காவல் ஆய்வாளர் பெரியசாமி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த கொடூரத் தாக்குதல் நடத்திய பெரியசாமி கைது செய்யப்பட்டதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரங்கராஜ் முன்னிலையில் முருகேசனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து, அவர் முன்னிலையிலேயே முருகேசனின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
முருகேசனின் உடல் அவரது சொந்த ஊரான இடையப்பட்டிக்கு காவல்துறையினரால் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க: வியாபாரி உயிரிழந்த விவகாரம் - தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்