ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்!

சேலம் : கோவிட்-19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் சுகாதாரத் துறைக்கு பெரும் உதவியாக இருந்து பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் பொட்டலங்களை சேலம் மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்.

Municipal Commissioner who provided Kapasurak drinking water parcels to cleaners
தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்!
author img

By

Published : Apr 15, 2020, 4:52 PM IST

உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கோவிட்-19 பெருந்தொற்று கடந்த 30 நாள்களாக இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட பரவல் நிலையை அடைந்திருக்கும் வைரஸ் தொற்றால் இதுவரை 12 பேர் உயிரிழந்தனர். 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் முனைப்போடு செயலாற்றி வருகின்றன. காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வி துறை என அனைத்து துறைகளும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்ள பகுதிகள், சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது, துப்புரவு செய்வது போன்ற முன்னெடுப்புகளில் தமது உயிரையும் பொருட்படுத்தாது தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்!

குறிப்பாக, கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் தீவிரமாக பரவிவரும் சேலம் மாநகரில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தொற்றை தடுக்கும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இன்று சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி சித்த மருத்துவம் பிரிவு சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு கரோனா நோய் தொற்றைத் தடுக்கும் கபசுரக் குடிநீர் பொடியை மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் வழங்கினார்.

அந்த நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை தூய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களிடம் ஆணையாளர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க : ’மொபைல் கடைகளை திறக்க அனுமதி வேண்டும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.