சேலம்: ஏற்காட்டில் கடந்த சில தினங்களாக பெரும்பாளான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளிலேயே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சில அடித்துசெல்லப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை முதலே ஏற்காட்டில் பெய்த சாரல் மழை காரணமாக கடும் பனிப்பொழிவு நிலவு வருகிறது. இதனால் அங்கு காபி தோட்டத்திற்கு வேலை தொழிலாளிகள் மற்றும் கட்டிடத் தொழிலாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!